
'கங்குவா' படத்திற்கு உயர் நீதிமன்ற உத்தரவால் மேலும் சிக்கல், மறுபுறம் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
செய்தி முன்னோட்டம்
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவாவின்' வெளியீட்டிற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
இந்த நிலையில் மற்றுமொரு சட்டசிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, 'Fuel Technologies' என்ற தனியார் நிறுவனத்திற்கு, படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், ரூ.1.60 கோடி வழங்க வேண்டும்.
அதனை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தவறும் பட்சத்தில், படத்தினை வெளியிடக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கங்குவா நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்து வரும் உத்தரவுகளால், தற்போது கங்குவா படத்தின் வெளியீட்டிற்கு புதிய தடைகள் ஏற்பட்டுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | கங்குவா படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல்..!#SunNews | #KanguvaReleaseIssue | #StudioGreen | #MadrasHC pic.twitter.com/ywli0rcPUB
— Sun News (@sunnewstamil) November 12, 2024
சிறப்பு காட்சி
கங்குவா படத்திற்கான சிறப்பு காட்சி திரையிடலுக்கு தமிழக அரசு அனுமதி
கங்குவா திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
இந்த மொழிகளில் அனைத்திலும் AI தொழில்நுட்பம் மூலம் சூர்யாவே டப்பிங் செய்துள்ளார்.
சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்கனவே தயாரிப்பு தரப்பு தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கங்குவா திரைப்படம் வெளியாகும் தினத்தன்று, அதாவது நவம்பர் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.