
கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு 'கல்கி 2898 கிபி' படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
செய்தி முன்னோட்டம்
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அவர் நடித்து வரும் திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரம் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோ வெளியிடப்பட்டது. நேற்று KH234 திரைப்படத்தின் பெயர் மற்றும் டைட்டில் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்நிலையில் தற்போது கமலஹாசன், தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடித்து வரும் கல்கி 2898 கிபி படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், துல்கர் சல்மான், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், திஷா பதானி, ரானா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கமல்ஹாசன் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
போஸ்டர் வெளியிட்டு கல்கி 2898 கிபி படக்குழுவினர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து
Happy birthday to the one and only #Ulaganayagan @ikamalhaasan, the global phenomenon of cinema!
— Kalki 2898 AD (@Kalki2898AD) November 7, 2023
- Team #Kalki2898AD pic.twitter.com/GxjfYXPB1M