கல்கி 2898 AD பார்ட் 2 படப்பிடிப்பு அறிவிப்பு: இயக்குநர் நாக் அஸ்வின் வெளியிட்ட அப்டேட்
செய்தி முன்னோட்டம்
இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக இயக்குநர் நாக் அஸ்வின் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் நாக் அஸ்வின், "அடுத்த மாதம் முதல் கல்கி பார்ட் 2 படத்திற்கான வழக்கமான படப்பிடிப்பு தொடங்குகிறது. 2027-ஆம் ஆண்டின் பாதியிலேயே படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் திரைப்படம் 2027-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திரைக்கு வரக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.
தேசிய விருது
தேசிய விருது தந்த உற்சாகம்
72-வது தேசிய திரைப்பட விருதுகளில் கல்கி 2898 ஏடி, 'சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்' மற்றும் 'பெஸ்ட் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்' ஆகிய விருதுகளை வென்றுள்ளது.
இது குறித்து பேசிய நாக் அஸ்வின், இந்த தேசிய விருதுகள் தங்களது குழுவிற்கு இரண்டாம் பாகத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த தீபிகா படுகோன் கருத்து வேறுபாடுகளால் இரண்டாம் பாகத்திலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்படலாம் என செய்திகள் உலா வந்தாலும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.