
நான் அழகு என்று உறுதியாக நம்ப பல ஆண்டுகள் ஆனது - பிரபல பாலிவுட் நடிகை
செய்தி முன்னோட்டம்
நடிகைகள், மாடலிங் அழகிகள் என்றாலே, பளபளப்பான சருமம், வெள்ளை நிற சருமம், வடிவான உடலமைப்பு என்று பொதுவான சில விஷயங்கள் கூறப்படுகிறது.
அழகுக்கு நிறமில்லை, பார்வைக்கு ஏற்றார்போல அழகு வேறுபாடும் என்று கூறப்பட்டு வந்தாலுமே, மாநிறம் கொண்டவர்கள், டஸ்கி ஸ்கின் பியூட்டி என்று கூறப்படும் வெற்றிகரமான நடிகைகள் மிகக் குறைவு.
அதிலும், பாலிவுட் ஸ்டீரியோடைப்பை உடைத்து, வெளிவந்தவர்களில் நடிகை காஜோல், ராணி முகர்ஜி, வித்யா பாலன், தபு என்று சிலர் மட்டுமே தான் இருக்கிறார்கள்.
தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான நடிகை கஜோல் இந்திப்பட உலகை பல ஆண்டுகள் கோலோச்சிய ஹீரோயின்களில் ஒருவர்.
நடிகை கஜோல், சமீபத்தில் தனது சரும நிறத்தால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையை பற்றி ஒரு பேட்டி அளித்துள்ளார்.
பாலிவுட்
ஸ்டீரியோடைப்பை உடைத்த நடிகை கஜோலின் பேட்டி
Humans of Bombay-விற்கு நடிகை கஜோல் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.
அதில் அவர் தனது தோற்றம், குண்டான உடலைமைப்பு, கண்ணாடி அணிவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி, எதிர்கொண்ட கேலி மற்றும் கிண்டல் பேச்சுக்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
"நான் எதையும் ஈசியாக எடுத்துக் கொள்வேன், புத்திசாலி, ஸ்மார்ட், அட்ராக்டிவ்வாக இருக்கிறேன். ஆனால் அழகாக இல்லை என்று பல ஆண்டுகள் நம்பியிருந்தேன். மற்றவர்களின் கருத்துகள் மூலம், தான் அழகு என்பதை நம்பவே பல ஆண்டுகள் ஆனது" என்பதை வலியுறுத்தி இருந்தார்.
கஜோலின் கருத்தை, அவரது சக நடிகர் நடிகையர் வரவேற்றுள்ளனர்.