
கைதி-2 திரைப்படத்திற்கு முன் வெளியாகவுள்ள 10 நிமிட குறும்படம்- நடிகர் நரேன் தகவல்
செய்தி முன்னோட்டம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், நரேன் ஆகியோர் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கைதி.
இப்படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். ஆனால் அப்படத்திற்கு பின்னர் விஜயை வைத்து லியோ திரைப்படத்தை இயற்றினார்.
பின்னர் கைதி 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்துடன் தலைவர்171 திரைப்படத்திற்காக இணையுள்ளார்.
இந்நிலையில், கைதி படத்தில் காவல் ஆய்வாளராக நடித்த நரேன் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அதில், கைதி-2 திரைப்படம் உருவாவதற்கு முன், லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்(எல்சியூ) கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும், பத்து நிமிட குறும்படம் வெளியாகும் எனவும், அதை லோகேஷ் உடன் இணைந்து அவர் இயக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
கைதி 2 அப்டேட்டை வெளியிட்ட நரேன்
Origin of #LCU - In an interaction, @itsNarain reveals that he and @Dir_Lokesh are working on a 10 MINUTE SHORT FILM that will reveal where it all started. It'll be released before #Kaithi2.
— Siddarth Srinivas (@sidhuwrites) December 13, 2023
Dilli - Vikram - Amar - Rolex - Leo 🔥pic.twitter.com/lRTOMcGRLC