NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிரபல ஹாலிவுட் ஜோடி ஜெனிபர் லோபஸ் மற்றும் பென் அஃப்லெக் விவாகரத்து கோரி மனு தாக்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரபல ஹாலிவுட் ஜோடி ஜெனிபர் லோபஸ் மற்றும் பென் அஃப்லெக் விவாகரத்து கோரி மனு தாக்கல்
    லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    பிரபல ஹாலிவுட் ஜோடி ஜெனிபர் லோபஸ் மற்றும் பென் அஃப்லெக் விவாகரத்து கோரி மனு தாக்கல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 21, 2024
    08:52 am

    செய்தி முன்னோட்டம்

    பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ், அவரது கணவர்-நடிகர் பென் அஃப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 20 அன்று மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    இந்த ஜோடி கடந்த 2022 இல் திருமணம் செய்து கொண்டது.

    திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் அவர்கள் அதை விட்டு வெளியேற முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில மாதங்களாக, இவர்களது பிரிவினை குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

    எனினும் விவாகரத்து தொடர்பான அறிக்கையை இந்த நட்சத்திர தம்பதி இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை .

    தகவல்

    இரண்டு முறை திருமணம் நடத்திய ஜோடி

    சட்ட ஆவணங்களில், ஜெனிபர் லோபஸ், தாங்கள் ஏப்ரல் 26, 2024 முதல் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.

    அறிக்கைகளின்படி, முன்கூட்டிய ஒப்பந்தம் அல்லது தீர்வு எதுவும் இல்லை.

    ஜெனிபர் லோபஸுக்கு நெருக்கமான ஒரு ஆதாரம் பீப்பிள்ஸிடம், அவர் பென் அஃப்லெக்கிலிருந்து பிரிவதை குறித்து யோசிக்க நேரம் எடுத்துக் கொண்டதாகவும், இப்போது அவரது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராகி விட்டதாகவும் கூறினார்.

    ஜெனிபர் லோபஸுக்கும், பென் அஃப்லெக்கும் இதுவரை இரண்டு திருமணங்கள் நடந்தன. முதலில் ஜூலை 16, 2022 அன்று லாஸ் வேகாஸில் திருமணத்தை நடத்தினர்.

    ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 20, 2022 அன்று, மறுபடியும் இந்த தம்பதி ஜார்ஜியாவில் பாரம்பரிய முறைப்படி திருமண விழாவை நடத்தினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹாலிவுட்
    திருமணம்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    ஹாலிவுட்

    பகவத் கீதையும், ஒபென்ஹெய்மரும்: 'அணுகுண்டின் தந்தை' என அழைக்கப்படும் இவரை பற்றி சில தகவல்கள் பொழுதுபோக்கு
    'ஓபன்ஹைய்மர்' திரைப்படத்தில் வரும் பகவத் கீதை காட்சிகளால் பரபரப்பு  மத்திய அரசு
    'ஜவான்' திரைப்படத்தில் உலகத்தரம் மிக்க 6 சண்டை பயிற்சியாளர்கள் ஷாருக்கான்
    'கேப்டன் அமெரிக்கா' நடிகர் ரகசிய திருமணம் பொழுதுபோக்கு

    திருமணம்

    நடிகர் சித்தார்த்-நடிகை அதிதி ராவ் ஹைதரிவிற்கு இன்று திருமணம்? நடிகர்
    மறைந்த நடிகர் விவேக்கின் மகளுக்கு திருமணம்; அப்பாவின் ஆசைப்படி மரக்கன்றுகளை பரிசளித்த மணமக்கள் நடிகர்
    சித்தார்த்- அதிதி ராவ் ஹைதரி: திருமணம் இல்லை..நிச்சயதார்த்தம் தான் நடைபெற்றது கோலிவுட்
    நடிகர் கிஷன்தாஸிற்கு விரைவில் டும்..டும்..டும்! அவரே வெளியிட்ட சூப்பர் அப்டேட் நடிகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025