
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஜெயம் ரவியின் புது 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக்
செய்தி முன்னோட்டம்
நடிகர் 'ஜெயம்' ரவி கடைசியாக 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்தார்.
பொன்னியின் செல்வராகவே வாழ்ந்திருந்த ரவியின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்திற்கு அவரை தவிர வேறு யாரும் சரியான தேர்வாக இருந்திருக்க முடியாது என்பது போல, அவரின் நடிப்பும், உடல் மொழியும் இருந்தது.
அந்த படத்திற்கு பிறகு, 'இறைவன்' என்ற படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, அவரது அகிலன் படமும் அடுத்த மாதம் வெளியாக போவதாக அறிவிக்க பட்டது.
இதை தொடர்ந்து, தற்போது 'ஸைரன்' என்ற படத்தில் நடிக்க போகிறார் 'ஜெயம்' ரவி. அந்த படத்துக்கான புது லுக்குடன் நேற்று ஒரு விழாவில் கலந்து கொண்டார்.
அந்த புகைப்படங்கள் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
ஜெயம் ரவியின் புது லுக்
@actor_jayamravi's New Look 🤩#JayamRavi #Siren #TamilCinema #Indiaglitz
— IndiaGlitz - Tamil (@igtamil) February 25, 2023
For more images https://t.co/hmoZcC1W5j pic.twitter.com/Qw6bYyBRXJ