Page Loader
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் 'காதலிக்க நேரமில்லை' டீசர் வெளியானது
படத்திற்கு இசை, ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் 'காதலிக்க நேரமில்லை' டீசர் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Jun 03, 2024
05:21 pm

செய்தி முன்னோட்டம்

ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் டீஸர் இன்று வெளியானது. கடந்து திங்களன்று ஜெயம் ரவி தனது சமூக ஊடக கணக்குகளில் இந்த திரைப்படத்தின் போஸ்டர்-ஐ பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில், தற்போது இது வெளியாகியுள்ளது. 29 வினாடிகள் கொண்ட டீசரில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இருவரும் இடம்பெற்றிருந்தனர். 'காதலிக்க நேரமில்லை' படத்தில் யோகி பாபு , வினய் ராய் மற்றும் நடிகர் லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை, ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தயாரிப்பு விவரங்கள்

'காதலிக்க நேரமில்லை' படத்தில் நடிக்கும் நட்சத்திர நடிகர்கள் மற்றும் குழுவினர்

காதலிக்க நேரமில்லை படத்தில் யோகி பாபு, வினய் ராய் மற்றும் நடிகர் லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் ஒலிப்பதிவை புகழ்பெற்ற ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ ஆடியோ உரிமையை டி-சீரிஸ் பெற்றுள்ளது. இந்த படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. முதல் போஸ்டர் நவம்பரில் வெளியானது.

embed

'காதலிக்க நேரமில்லை' டீசர்

Here's a glimpse into the world of #KadhalikkaNeramillai ➡️ https://t.co/SsgBINoSup "காதலிக்க நேரமில்லை"@MenenNithya@astrokiru@RedGiantMovies_@arrahman@tseriessouth@iYogiBabu @VinayRai1809 @LalDirector @highonkokken @TJBhanuOfficial @LakshmyRamki @VinodhiniUnoffl...— Jayam Ravi (@actor_jayamravi) June 3, 2024