
ஜெயிலர் படத்தின் 2வது பாடலுக்கான ப்ரீ-வியூ வீடியோ வெளியீடு
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் 'ஜெயிலர்'.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, பிரியங்கா மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்று படக்குழு கூறியுள்ளது.
முத்துவேல் பாண்டியன் என்னும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி இதில் நடித்துள்ளார், அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இப்படத்தின் இசையினை அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் சிங்கிளான 'காவாலா' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் 2வது பாடலுக்கான ப்ரீ-வியூ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
2ம் பாடலுக்கான ப்ரோமோ
வெளியானது ‘ஜெயிலர்’ படத்தின் 2வது பாடலுக்கான Preview வீடியோ!
— Sun News (@sunnewstamil) July 15, 2023
Watch: https://t.co/On5MAf9cM6#SunNews | #JailerFromAug10 | #Hukum pic.twitter.com/AcE1SbChYZ