Page Loader
அயோத்தி அனுமார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
ஜெயிலர் ரிலீஸுக்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.

அயோத்தி அனுமார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

எழுதியவர் Sindhuja SM
Aug 20, 2023
05:56 pm

செய்தி முன்னோட்டம்

இந்து கடவுளான ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்திக்கு இன்று(ஆகஸ்ட் 20) சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள அனுமார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதற்கு பின், பேட்டி அளித்த அவர், தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய திரைப்படமான 'ஜெயிலர்' கடந்த வாரம் வெளியிடப்பட்டு, வெற்றிகாரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜெயிலர் ரிலீஸுக்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார். வியாழக்கிழமை, இமயமலை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய அவர், தற்போது உத்தர பிரதேசத்தில் உள்ளார். நேற்று அவர், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ