Page Loader
இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது
ஜூன் 1 ஆம் தேதி இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெறவுள்ளது

இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
May 27, 2024
11:53 am

செய்தி முன்னோட்டம்

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகவுள்ளது. அதன்படி வரும் ஜூன் 1 ஆம் தேதி இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே அனிருத் இசையில் பா.விஜய் எழுதிய 'பாரா' என்ற பாடல் கடந்த மே 22ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாடல் வரும் மே 29ம் தேதி வெளியாகும் என படநிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியன் 2 திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. முதல் பாகம் ஜூலை மாதம் வெளியாகவுள்ள நிலையில், 6 மாதங்கள் கழித்து அடுத்த பாகம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

embed

இந்தியன் 2 இசை வெளியீட்டு தேதி 

#CinemaUpdate | சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்தின் 2வது பாடல் வரும் 29ம் தேதி வெளியாகும் என படநிறுவனம் அறிவிப்பு. ஜூன் 1ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது#SunNews | #Indian2 | #Kamalhaasan |... pic.twitter.com/sbZDMis5Jy— Sun News (@sunnewstamil) May 27, 2024