Loading...
IIFA விருதுகள் 2026: சிறந்த படம், நடிகர் உட்பட 12 விருதுகளை வென்றது துரந்தர் திரைப்படம்
ஐஐஎஃப்ஏ விருதுகளில் 12 விருதுகளை வென்று ரன்வீர் சிங்கின் துரந்தர் சாதனை படைத்துள்ளது.

IIFA விருதுகள் 2026: சிறந்த படம், நடிகர் உட்பட 12 விருதுகளை வென்றது துரந்தர் திரைப்படம்

எழுதியவர் Vasuki
Nov 02, 2026
07:27 pm

செய்தி முன்னோட்டம்

2026-ஆம் ஆண்டிற்கான 26-வது சர்வதேச இந்தியத் திரைப்பட அகாடமி விருதுகளில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர் ஆதித்யா தார் மற்றும் சிறந்த நடிகர் ரன்வீர் சிங் உட்பட 12 முக்கிய விருதுகளை அள்ளிக் குவித்து சாதனை படைத்துள்ளது. சையாரா படத்தில் நடித்த இளம் நடிகை அனீத் பத்தா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். ஓடிடி பிரிவில் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் இயக்கிய தொடர் சிறந்த வெப்தொடர் விருதை வென்றது. சிறந்த சர்வதேசப் படமாக அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் தேர்ந்தெடுக்கப்பட்டது.

12 விருதுகள்

திரைத்துறையை திரும்பிப் பார்க்க வைத்த துரந்தர்

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் நடிப்பில் வெளியாகி ₹1,350 கோடிக்கும் மேல் வசூலித்த துரந்தர் திரைப்படம், IIFA விருது விழாவில் 12 விருதுகளைக் குவித்து சாதனை படைத்துள்ளது.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் ஆகிய முதன்மை விருதுகளை இப்படம் வென்றது.

மேலும், சிறந்த துணை நடிகர் (சஞ்சய் தத்), வில்லன் (அக்ஷய் கண்ணா), இசை, கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒலிவடிவமைப்பு உள்ளிட்ட 12 முக்கியப் பிரிவுகளிலும் விருதுகளை அள்ளி துரந்தர் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

சையாரா படத்திற்காக இர்ஷாத் கமீல் (பாடலாசிரியர்), ஹீம் அப்துல்லா, ஸ்ரேயா கோஷல் (பின்னணிப் பாடகர்கள்) விருதுகளைப் பெற்றனர்.

ADVERTISEMENT