Page Loader
லப்பர் பந்து OTTயில் வெளியாகும் தேதி இதுதான்!

லப்பர் பந்து OTTயில் வெளியாகும் தேதி இதுதான்!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 10, 2024
06:44 pm

செய்தி முன்னோட்டம்

குறைவான பட்ஜெட்டில் உருவாகி, ரசிகர்களின் நேர்மறை விமர்சனங்களை பெற்று, மாபெரும் ஹிட் ஆன திரைப்படம் சமீபத்தில் வெளியான 'லப்பர் பந்து'. ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தைப் பார்த்த வெற்றிமாறன், பா. ரஞ்சித், சிவகார்த்திகேயன், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி போன்றோர் மனதார படத்தைப் பாராட்டியிருந்தனர். திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் 'லப்பர் பந்து' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 'லப்பர் பந்து' திரைப்படம் வரும் 18ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post