அடுத்த செய்திக் கட்டுரை

மும்பையில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக தகவல்
எழுதியவர்
Sindhuja SM
Apr 14, 2024
10:51 am
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மும்பை இல்லத்திற்கு வெளியே இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக போலீசார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில், பாந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் காற்றில் ஐந்து ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சம்பவ இடத்தை விட்டு வேகமாக ஓடிவிட்டனர். சல்மான் கான் வசிக்கும் கட்டிடத்தின் முதல் தளத்தையும் ஒரு தோட்டா தாக்கியதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டில் வெளிநாட்டு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு
நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு !#SalmanKhan #Gunfire #Gunshot #Bollywood #KalaignarSeithigal pic.twitter.com/DHQzP3L7d7
— Kalaignar Seithigal (@Kalaignarnews) April 14, 2024