வெளியானது லியோ படத்தின் இரண்டாவது பாடலின் க்லிம்ஸ் வீடியோ
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ள படம் லியோ.
இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "நான் ரெடி" என்ற பாடலை நடிகர் விஜய் பிறந்தநாளான கடந்த ஜூன் 22ஆம் தேதி படக்குழு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பட தயாரிப்பு நிறுவனம் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்தது.
தற்போது இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "படாஸ்" பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதை ஒட்டி படக்குழு அந்த பாடலின் க்லிம்ஸ் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
"படாஸ்" பாடல் இன்று வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது
#Badass - #LeoSecondSingle from tomorrow 😎🔥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @Jagadishbliss @VishnuEdavan1 @SonyMusicSouth #Leo #BadassFromTomorrow pic.twitter.com/Wu3ckSQmRF
— Seven Screen Studio (@7screenstudio) September 27, 2023