Loading...
வார இறுதியில் தியேட்டருக்கு செல்ல திட்டமா? 5 படங்களின் லிஸ்ட் இதோ
வார இறுதியில் தியேட்டரில் ரிலீஸாகும் 5 படங்கள்

வார இறுதியில் தியேட்டருக்கு செல்ல திட்டமா? 5 படங்களின் லிஸ்ட் இதோ

எழுதியவர் Vasuki
Nov 18, 2026
05:40 pm

செய்தி முன்னோட்டம்

வார இறுதி விடுமுறை நாட்களைக் கொண்டாடும் வகையில், வரும் வெள்ளிக்கிழமை (நவ. 20) தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் உருவான 5 முக்கியத் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளன. இதில் அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ள திரைப்படம், 'அமரன்' புகழ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் மற்றும் மம்மூட்டி முதல்முறையாக இணைந்து நடித்துள்ள 'ஓம்'. செம்மரக் கடத்தலை மையப்படுத்தி வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் பிரம்மாண்ட ஆக்‌ஷன் த்ரில்லரில், சாய் பல்லவி காவல்துறை அதிகாரியாகவும், ஸ்ரீலீலா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

படைப்புகள்

குடும்பப் பாசமும் நீதிமன்ற பரபரப்பும்

ஆக்‌ஷன் படத்திற்கு இணையாக, உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்துத் தயாரித்துள்ள 'அப்பா குட்டி' திரைப்படமும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகிறது.

மு. மாறன் இயக்கத்தில் தந்தை - மகள் பாசத்தைப் பேசும் இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள், அருவி மதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதேபோல், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படமும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.

அறிமுக இயக்குநர் பிரவீன் விஜய் இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையில் ஒரு கொலை வழக்கை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான நீதிமன்றக் கதைக்களமாக இப்படம் உருவாகியுள்ளது.

பன்மொழி

கவனம் ஈர்க்கும் பன்மொழிப் படங்கள்

தமிழ் நேரடி திரைப்படங்களைத் தொடர்ந்து, பிற மொழிகளில் உருவாகி பல மொழிகளில் வெளியாகும் படங்களும் இந்த வாரம் களமிறங்குகின்றன.

தெலுங்கு இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன், சாத்விகா, ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா' திரைப்படம், விண்வெளி வீராங்கனையாக விரும்பும் பெண்ணின் லட்சியக் கனவை பேசும் படைப்பாக தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகிறது.

மேலும், சீன சர்வதேசத் திரைப்பட விழாவில் பாராட்டுகளை பெற்ற ஷைன் ஷெட்டி, தன்வி ராம், சம்பத் ராஜ் நடித்துள்ள கன்னட நகைச்சுவை திகில் திரைப்படமான 'சங்கராபரணம்' திரைப்படமும் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ADVERTISEMENT