ஹ்ரித்திக் ரோஷன் முதல் ஆலியா பட் வரை: பாலிவுட் நட்சத்திரங்கள் மேற்கொள்ளும் ஃபிட்னெஸ் பயிற்சிகள்
சினிமா நட்சத்திரங்கள் எப்போதும் கவர்ச்சியாகவும், ஃபிட் ஆகவும் இருக்க வேண்டும் என்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அனைவரும் டயட் முறைகளை பின்பற்றினாலும், ஒர்க்-அவுட் முறை ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. நீங்கள் திரையில் பார்த்து ரசிக்கும் பாலிவுட் பிரபலங்கள் எல்லா நேரங்களிலும், சிறந்த தோற்றத்தினை மெயின்டைன் செய்வதற்கு பலவித உடற்பயிற்சிகளைப் பின்பற்றுகிறார்கள். அவற்றை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். முடிந்தால் நீங்களும் பின்பற்றி ஒரு பாலிவுட் நட்சத்திரமாக மாறுங்கள்.
RRR பட நாயகி ஆலியா பட் கார்டியோ உடற்பயிற்சிகளை தேர்வு செய்கிறார்
தனது முதல் படமான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் நடிப்பதற்காக 20 கிலோ எடையை ஆறு மாதத்தில் குறைத்தாராம். இதற்கு அவர் தேர்வு செய்த உடற்பயிற்சி முறை கார்டியோ என்கிறார் ஆலியா பட். அன்று முதல் அதை தொடர்ந்து தனது தினசரி உடற்பயிற்சி வழக்கத்தில் இணைத்து வருகிறார். இவற்றோடு, ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் பிற வகையான உடற்பயிற்சிகளின் கலவையுடன் தினசரி வழக்கத்தை ஏற்படுத்தி கொள்வது அவசியம் என்கிறார் அவர்.
ஆடுகளம் நடிகை தாப்ஸி பண்ணு, எடை பயிற்சியை தேர்வு செய்கிறார்
மனமும் தசைகளும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு எடையுடன் கூடிய பயிற்சி மிகவும் முக்கியமானது என்று தாப்ஸி பன்னு நம்புகிறார். எடையுடன் செயல்புரிவதற்கான முக்கிய வடிவமாக சர்க்யூட் பயிற்சியுடன், அவர் தனது உடலமைப்பை ஃபிட்டாக வைத்திருக்க தனது அன்றாட வழக்கத்தில் கார்டியோ மற்றும் செயல்பாட்டு பயிற்சிகளை இணைத்துக்கொள்கிறார். வெள்ளாவி நடிகை குறிப்பாக பாலிவுட் பக்கம் சென்றதிலிருந்து உடற்பயிற்சிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
தூம் பட நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் எடை பயிற்சி + கார்டியோவை தேர்வு செய்கிறார்
எப்போதும் ஃபிட்டாக இருக்கும் பாலிவுட் நடிகர்களில் மிக முக்கியமானவர், ஹ்ரித்திக் ரோஷன். அவர் ஷூட்டிங் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தினசரி உடற்பயிற்சி செய்வதை கைவிடுவதில்லை. 50 வயதிலும் இளைமையாக இருக்கும் ஹ்ரித்திக் தனது உடற்பயிற்சியில் கணிசமான அளவு எடைப் பயிற்சியை இணைத்துக் கொள்கிறார். இவற்றோடு, ஹ்ரித்திக் தனது உடலுக்கு போதுமான ஓய்வு,நல்ல தூக்க சுழற்சி மற்றும் ஊட்டச்சத்து நிரம்பிய ஆரோக்கியமான உணவுடன் பேணுகிறார். தசை வளர்ச்சியுடன், மெலிந்த உடலமைப்பிற்கான அவரது டிப்ஸ். கார்டியோ பயிற்சிகள், சில விளையாட்டுகள், அதிக தீவிர இடைவெளி பயிற்சி அல்லது நீள்வட்டப் பயிற்சிகள் ஆகியவையாக என்கிறார்.