வாழை vs கொட்டுக்காளி: முதல்நாள் வசூல் ரீதியாக எந்த படம் பெஸ்ட்?
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) வாழை மற்றும் கொட்டுக்காளி என இரண்டு தமிழ் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியான நிலையில், விமர்சன ரீதியாக இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வசூல் ரீதியாக எந்த படம் முன்னிலையில் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அசுரன், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களைக் கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற படம் வெளியாகியுள்ளது. சிறுவர்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு நெல்லை மாவட்ட பின்புலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பெல் நடித்த கொட்டுக்காளி படம் வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
படத்தின் முதல்நாள் வசூல்
வாழை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், கொட்டுக்காளி படம் ஒரு தரப்பிடம் பாசிட்டிவ் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். எனினும், கொட்டுக்காளி படம் சூரியின் சினிமா கேரியரில் அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இரண்டு படங்களின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வாழை படம் முதல் நாளில் ரூ.1.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், கொட்டுக்காளி ரூ.50 முதல் ரூ.1 கோடிக்குள் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அடுத்தடுத்து வரும் விடுமுறை நாட்களில் கொட்டுக்காளியின் வசூலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.