உடல் ஆரோக்கியம்: ரீபைண்ட் எண்ணெய்க்கு மாற்றாக இந்த எண்ணெய்களை உபயோகிக்கலாம்
செய்தி முன்னோட்டம்
உடல் நலத்தை பேண, சுத்திகரிக்கப்பட்ட காய்கறி எண்ணெயை அதிகமாக உபயோகிப்பதை தவிர்க்குமாறு, மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு மாற்றாக இந்த எண்ணெய்களை உபயோகிக்கலாம்.
ஆலிவ் எண்ணெய்: பல ஊட்டச்சத்து நிபுணர்கள், ஆலிவ் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும் என்று நம்புகிறார்கள். விர்ஜின் ஆலிவ் எண்ணெயில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் சில பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
அவகேடோ எண்ணெய்: இந்த எண்ணெயும், ஆலிவ் எண்ணெயைப் போலவே சிறந்தது எனக் கருதப்படுகிறது. இது மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இரண்டிலும் நிறைந்துள்ளது. மேலும் இதில் அதிக அளவு வைட்டமின் ஈ உள்ளது. இது விலை உயர்ந்ததாக இருந்தாலும், பெரும்பாலான எண்ணெய்களை விட உடலநலத்திற்கு சிறந்தது.
உடல் ஆரோக்கியத்தை காப்போம்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு மாற்றாகும் நெய்
நெய்: வெண்ணையை உருக்கி எடுக்கப்படும் நெய்யில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகிய நிரம்பியுள்ளது. நெய், இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துவதாக உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எள் எண்ணெய்: ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நிரம்பி உள்ள எள் எண்ணையில், உள்ள செசாமால் மற்றும் செசமினோல், இதயத்திற்கு மிகவும் உகந்தது மற்றும் பார்கின்சன் நோய்க்கு எதிராக நரம்பு ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்துகளை வழங்குவதாக அறியப்படுகிறது.
ரைஸ் பிரான் எண்ணெய்: அரிசி தவிடில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இந்த ரைஸ்பிரான் எண்ணெயில், வைட்டமின்கள் E மற்றும் K நிறைந்துள்ளது.
வால்நட் எண்ணெய்: வால்நட் எண்ணெயில், வைட்டமின்கள் கே மற்றும் ஈ, துத்தநாகம், கோலின், பாஸ்பரஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் ஆகியவை நிறைந்துள்ளன.