சல்மான் கானை திருமணம் செய்ய அவரது பண்ணை வீட்டுக்கு சென்ற ரசிகை; இப்போது போலீஸ் காவலில்!
டெல்லியைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், தன்னை சல்மான் கானின் தீவிர ரசிகை என்று கூறிக்கொண்டு, சமீபத்தில் நடிகரின் பன்வெல் பண்ணை இல்லத்திற்கு சென்றதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. தன்னுடைய ஹீரோவான சல்மான் கானை திருமணம் செய்துகொள்ளும் கனவுகளுடன், உற்சாகமாக பண்ணை வீட்டிற்கு சென்ற அந்த பெண் ரசிகர், அவரை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார், பிரச்னை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, உள்ளூர் கிராமவாசிகள், அந்த பெண் செய்த பிரச்சனைகளை பதிவுசெய்து, பன்வெல் தாலுகா காவல் நிலையத்தை அணுகியதால், அந்த பெண் ரசிகையின் கல்யாண கனவு நொறுங்கி போனது. தற்போது அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெண் காவலில் வைக்கப்பட்டு ஆலோசனைக்காக அனுப்பட்டுள்ளார்
சல்மான் கானின் பன்வெல் பண்ணை வீட்டில் இந்த சம்பவம் நடந்தபோது, நடிகர் அங்கே இல்லை. ஒரு டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட அந்த பெண் ரசிகை, காவல்துறையினரால் மனநல ஆலோசனைக்காக நியூ பன்வேலை தளமாகக் கொண்ட NGO, சமூக மற்றும் சுவிசேஷ சங்கம் (SEAL) க்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த பெண் அதன் மனநல சிகிச்சைக்காக கலம்போலியில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று SEAL இன் நிறுவனர் தெரிவித்தார். சல்மான் கானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் டெல்லியில் இருந்து நவி மும்பைக்கு தனியாக பயணம் செய்து வந்துள்ளார் அந்த வெறி கொண்ட ரசிகை.