Page Loader
ஜெயிலர் 2 -இல் மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபஹத் ஃபாசில்
மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபஹத் ஃபாசில்

ஜெயிலர் 2 -இல் மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபஹத் ஃபாசில்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 24, 2025
05:27 pm

செய்தி முன்னோட்டம்

நெல்சன் இயக்கத்தில் மீண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தில் ரஜினியுடன் மீண்டும் ஃபஹத் ஃபாசில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் முன்னதாக 2024 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் டி.ஜே. ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. 'வேட்டையன்' படத்தின் ஒரு நகைச்சுவை கலந்த அழுத்தமான கதாபாத்திரத்தில் ஃபஹத் நடித்திருந்தார். அதேபோல 'ஜெயிலர் 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவின் அட்டப்பாடியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் தற்போதைய ஷெட்யூலில் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

ஜெயிலர் 2 படத்தை பற்றிய விவரங்கள்

ஜெயிலர் 2 வின் அடுத்த ஷெட்யூலில் இருந்து ஃபஹத் பாசில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவர் படத்தில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் நடிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இவரைத்தவிர சிவராஜ் குமார் நடிப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு SJ சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பொங்கல் பண்டிகையையொட்டி, படத்தின் அறிவிப்பு வீடியோவை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பகிர்ந்திருந்தது. ஓய்வுபெற்ற ஜெயிலர் ரஜினிகாந்தின் டைகர் முத்துவேல் பாண்டியன் மீண்டும் வருவதை ப்ரோமோ வெளியிட்டது. இந்த படத்திலும் இசையமைக்கவுள்ளது அனிருத்.