
லோகேஷ் LCU: தளபதி 67ல் பஹத் பாசில் நடிக்கப்போகிறாரா? நிருபர்கள் கேள்விக்கு பஹத் பதில்
செய்தி முன்னோட்டம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும், தளபதி 67ல், தானும் நடிக்க வாய்ப்புள்ளதாக பஹத் பாசில் தெரிவித்துள்ளார்.
தளபதி 67-ல், பகத் பாசில் நடிக்க வாய்ப்புள்ளதா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பஹத் "படம் LCU இன் ஒரு பகுதியாக இருப்பதால், நானும் அதில் ஒரு பகுதியாக இருக்கலாம்." எனக்கூறியுளார்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு, விஜயும், லோகேஷ் கனகராஜும் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது, கொடைக்கானலில் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில், இயக்குனர் கௌதம் மேனனும், இயக்குனர் மிஷ்கினும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், படத்தை குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
தளபதி 67-ல், பஹத் பாசில்?
Exclusive ✅️ : #Thalapathy67 is Part of LCU says Actor Fahadh Faasil 🔥! pic.twitter.com/cxnCOcBWee
— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) January 22, 2023