Page Loader
தளபதி 67: விரைவில் புதிய அறிவிப்புகள் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் தகவல்
விரைவில் விஜயின் அடுத்த படத்தின் அப்டேட்

தளபதி 67: விரைவில் புதிய அறிவிப்புகள் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 13, 2023
12:50 pm

செய்தி முன்னோட்டம்

விஜயின் சமீபத்திய திரைப்படமான வாரிசு, இரு தினங்களுக்கு முன் வெளியானது. பொங்கல் விடுமுறையை எதிர்நோக்கி வெளி வந்த இந்த படம், அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார். இது குறித்து அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தாலும், அதன் பின்னர், படத்தை பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில், கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லோகேஷ், "வாரிசு திரைப்படம் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக தான், எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்தோம். இப்போது வாரிசு படம் ரிலீஸாகிவிட்டது. இன்னும் ஒரு பத்து நாட்களில் அப்டேட் எதிர்பார்க்கலாம். இனி தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகும்" என கூறினார்.

நடிகர் விஜய்

'மாஸ்டர்' கூட்டணி மீண்டும் இணையும் தளபதி 67

சமீபத்தில், அஜித் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் சிலர், திரையரங்குகளின் கண்ணாடியை உடைத்ததாகவும், ஒருவருக்கு கால் உடைந்த சம்பவமும், மற்றுமொரு, 19 வயது இளைஞன், லாரி மீது இருந்து தவறி விழுந்து இறந்த துயர சம்பவமும் நடந்தது. அதை பற்றி பேசிய லோகேஷ், " ரசிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இது வெறும் சினிமா தான். உயிரை விடும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. சந்தோஷமாக படத்தை பார்த்துவிட்டு, பத்திரமாக வீட்டிற்கு சென்றாலே போதும். உயிரே போகும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை என்பது தான் என் கருத்து" என்றும் கூறினார். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இருவரும் இணையும் இப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.