வாரிசு பொங்கல்: பாலக்காட்டில், பெண்களுக்காக பிரத்யேக FDFS ஷோ
அஜித்தின் 'துணிவு' திரைப்படமும், விஜயின் 'வாரிசு' திரைப்படமும், நேற்று வெளியானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படங்கள், அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக மாறியுள்ளது. அண்டை மாநிலங்களிலும் இந்த படம் நேற்று வெளியானது. விஜயின் படங்களுக்கு, கேரளாவில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக பெண் ரசிகர்கள் ஏராளம். அங்கும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த பெண் ரசிகர்களுக்கென்று, பிரத்யேகமான FDFS ஷோ ஏற்பாடு செய்தனர் விஜய் ரசிகர்கள். விகடன் பதிவிட்ட இந்த செய்தி படி, பாலக்காட்டில் உள்ள அரோமா தியேட்டரில், இந்த முதல் நாள் முதல் ஷோ ஏற்பாடு செய்திருந்தனர்.
பெண்களுக்காக பிரத்யேக FDFS ஷோ
வாரிசு படத்தை கண்டுகளித்த விஜய் ரசிகைகள்
அந்தக் காட்சியை கண்டுகளித்த பெண்கள், மிகுந்த உற்சாகத்துடன், "விஜய் அண்ணாவோட தீவிர ரசிகர்கள் நாங்க. எந்தப் படமா இருந்தாலும் முதல்நாள் முதல்காட்சி பார்த்துடுவோம்", என்றனர். "ஆனா, பொதுவா அங்க ஆண்கள் அதிகமா இருப்பாங்க என்பதால, அண்ணனை திரைல பார்க்கறப்ப எங்களோட முழு உற்சாகத்தை அங்க கொண்டாட முடியாது. அந்தக் குறைய போக்குற விதமா வாரிசு படத்தை ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தோடு இந்த முறை ரசிச்சோம்" என்று மேலும் தெரிவித்தனர். இந்த ஏற்பாட்டை செய்ததாக கூறப்படும், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கூறுகையில், "நம்மள மாதிரிதானே அவங்களுக்கும் ஆசை இருக்கும். அதனால தான் எந்தத் தொந்தரவும் இல்லாம அவங்க பாதுகாப்பா, வாரிசு பட வெளியீட்டை கொண்டாட இந்த ஏற்பாட்டை செஞ்சோம்" என்று தெரிவித்தனர்.