டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் மீட்பு
டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களுக்கு பயணம் மேற்கொண்ட டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் மற்றும் மனித எச்சங்களை கண்டறிந்து இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை பார்க்க, ஓசன்கேட் நிறுவனம் டைட்டன் என்ற சிறிய நீர்மூழ்கி கப்பலில், சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றபோது ஜூன் 18 ஆம் தேதி வெடித்து சிதறியது. அந்த விபத்தில் டைட்டன் நீர்மூழ்கியில் பயணித்த ஓஷன் கேட் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டிஷ்-பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத், இவரது மகன் சுலைமான், பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பிரான்ஸ் கடற்படை டைவர்பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் உயிரிழந்தனர்.
டைட்டனின் உடைந்த பாகங்கள் மீட்பு
டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் கடல்ப்படுகையில் இருந்து கிடைத்ததாகவும், அதை துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று ஆராய்ந்து வருவதாகவும் கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பாகங்களில் உள்ள மனித எச்சங்கள் குறித்து ஆராயப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரிலிருந்து, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்ட டைட்டானிக் கப்பல், 1911 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் அந்த கப்பலில் பயணத்தை 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.