
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இணையும் வாரிசு பிரபலங்கள்
செய்தி முன்னோட்டம்
ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் இரு பெரும் பிரபலங்கள் இணைந்துள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவன தயாரிப்பில் ஒரு புது படத்தை இயக்கவிருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எனினும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வேறு எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கப்போவதாக கூறப்பட்டது.
எனினும் அது குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இணையத்தில் வெளியான தகவலின்படி, இந்த புதிய படத்தில், மலையாள திரைப்பட நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு இசையமைக்கவிருப்பது யுவன் ஷங்கர் ராஜா எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக இப்படத்தின் பூஜை வேலைகளும் சத்தமின்றி நடந்து முடிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
embed
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் துல்கர் சல்மான்
லைக்கா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்#JasonSanjay #DulquerSalmaan #DinakaranNews pic.twitter.com/M9wKSgxDWO— Dinakaran (@DinakaranNews) February 21, 2024