Page Loader
கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்திலிருந்து விலகும் துல்கர் சல்மான்
கால்ஷீட் ஒதுக்க முடியாத காரணத்தால், இப்படத்தில் இருந்து விலகும் துல்கர் சல்மான்

கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்திலிருந்து விலகும் துல்கர் சல்மான்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 05, 2024
09:52 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் துல்கர் சல்மான், முதல்முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவிருந்த திரைப்படம், 'தக் லைஃப்'. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திலிருந்து தற்போது அவர் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துல்கர் சல்மான் தொடர்ச்சியாக பல படங்கள் நடித்து வருவதால், அவரால் இந்த படத்திற்கு அதிக நாட்கள் ஒதுக்க முடியாத காரணத்தால், இப்படத்தில் இருந்து அவர் விலக முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. துல்கர் சல்மான் தற்போது சூர்யாவின் 'புறநாணூறு' திரைப்படத்திலும் நடித்துவருகிறார். இப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். அதுமட்டுமின்றி, 'காந்தா', 'லக்கி பாஸ்கர்' என இரு படங்களிலும் நடித்து வருவதால், தக் லைஃப் படத்தில் நடிக்க அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post