சூர்யா 43: சூர்யாவுடன் இணைகிறார் துல்கர் சல்மான்
சென்ற ஆண்டின் தேசிய விருதுகளை அள்ளிய 'சூரரை போற்று' குழுவான, சூர்யா- சுதா கொங்கரா - GV பிரகாஷ் மீண்டும் ஒரு படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின. நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் பிஸியாக உள்ளார். மறுபுறம் சுதா கொங்கரா, சூரரை போற்று படத்தின் ஹிந்தி பதிப்பில் பிசியாக உள்ளார். இவர்கள் இருவரும் தத்தமது படங்களை முடித்த பின்னர், ஒரு புதிய படத்தில் இணையவுள்ளார்கள். இது சூர்யாவின் 43 வது படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் காணும் துல்கர் சல்மானும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் துவங்கவுள்ளது எனவும் கூறப்படுகிறது.