'சித்தப்பு' சரணவனுக்கும், ரஜினிக்கும் இருக்கும் இந்த சுவாரஸ்யமான தொடர்பு பற்றி தெரியுமா?
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம், இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், நேற்று 'ஜெயிலர்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. வெளியான சில மணித்துளிகளில் வைரலான அந்த ட்ரைலர் வீடியோவில், ரம்யா கிருஷ்ணன், சுனில், VTV கணேஷ், ஜாக்கி ஷ்ராப் ஆகியோரின் காட்சிகள் இடம்பிடித்திருந்தது. இவர்களுடன், யாரும் எதிர்பார்க்காத 'சித்தப்பு' சரவணனும் இந்த படத்தில் நடித்திருந்தார். அவரின் காட்சியும் ட்ரைலரில் இடம் பிடித்தது. சரவணன், ஒரு காலத்தில் நடிகர் முரளியின் இடத்தை நிரப்புவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர். ஒரு சில வெற்றி படங்களில் நடித்தவர், இடையில் சினிமாவை விட்டே விலகி இருந்தார். மீண்டும் அவர், 'பருத்தி வீரன்' திரைப்படத்தில், 'சித்தப்பு' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்த சரவணன்
தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் அவர் நடித்திருப்பதை தொடர்ந்து, அவரை பற்றிய ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. சரவணன் தீவிர ரஜினிகாந்த் ரசிகராம். 9 வது படிக்கும் போதே தன்னை சேலம் சூரமங்கலம் ரஜினி ரசிகர் மன்றத்தில் இணைத்து கொண்டவர், பின்னாளில் அதற்கு தலைவராகவும் ஆனாராம். ரஜினி படம் முதல் நாள், முதல் ஷோவின் போது சரவணன் செய்யும் அலப்பறைகளை அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர். அவர் சினிமாவில் நடிக்க வந்த பிறகும் கூட, அந்த மன்றத்தின் கௌரவ ஆலோசகராக பதவி வகித்திருந்தாராம். தற்போது தனது கனவு நாயகனின் படத்திலேயே அவர் நடித்திருப்பது பெருமையான தருணமாக அவர் கருதுவதாகவும் அவர் நண்பர்கள் கூறியுள்ளனர்.