
துப்பாக்கி திரைப்படம் விஜய் நடிக்க காரணமாக இருந்தது யார் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
கடந்த 2012 ஆம் ஆண்டு தீபாவளிக்கு பண்டிகைக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற துப்பாக்கி திரைப்படம், விஜய்க்கு எவ்வாறு அமைந்தது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
படத்தின் கதை, பாடல்கள், சண்டை காட்சிகள் என அனைத்தையும் புதிதாக ஏஆர் முருகதாஸ் கொடுத்திருந்த நிலையில், படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
மேலும் விஜயின் சினிமா வரலாற்றில், நூறு கோடி வசூலை தாண்டிய முதல் திரைப்படம் துப்பாக்கி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், துப்பாக்கி திரைப்படம் விஜய்க்கு நேரடியாக கிடைத்த படம் அல்ல என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
2nd card
விஜய்க்கு துப்பாக்கி படத்தை பெற்று தந்த சந்திரசேகர்
துப்பாக்கி படம் விஜய்க்கு கிடைப்பதற்கு மிக முக்கிய காரணம், இயக்குனரும் அவரின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் எனக் கூறப்படுகிறது.
துப்பாக்கி படத்திற்கு முன்னர், விஜய்யின் கால்ஷீட் இருந்ததால் அவரின் தந்தை சந்திரசேகர், ஏஆர் முருகதாஸிடம் விஜய்க்கு ஏதாவது கதை உள்ளதா, விஜய்யுடன் படம் பண்ணலாமா என கேட்டுள்ளார்.
ஏஆர் முருகதாசும், தான் ஹிந்தி நடிகர் அக்ஷய்குமாருக்காக வைத்திருந்த கதையை விஜய்யிடம் சொல்லியுள்ளார். அவருக்கு அக்கதை பிடித்துப் போக அப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
விஜயின் சினிமா வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய துப்பாக்கி திரைப்படம், அவரின் தந்தை மூலமாக அவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.