இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் யார் தெரியுமா? நம்ம ஆஸ்கார் நாயகன் தான்..!
ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான ஏஆர் ரஹ்மான் தான் தற்போது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் ஆவார். 'முழுநேர பாடகர்' அல்லாத ஏ.ஆர்.ரஹ்மான் தான் அதிக சம்பளம் பெறுபவர் என்று தொழில்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர், தான் பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ₹3 கோடி வரை வசூலிக்கிறார். குறிப்பிடத்தக்க வகையில், மற்ற முழுநேர திரைப்பாடகர்கள் இவரை விட 12-15 மடங்கு குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 'பெரிய பாய்' என தமிழ் ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் AR ரஹ்மான், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளை தாண்டி, ஹிந்தி, ஆங்கில படங்களிலும் தனது ஆளுமையை காட்டியுள்ளார். குறிப்பாக 'ஜெய் ஹோ' பாடலுக்கு ஆஸ்கார் விருதும் வென்றார்.
அதிக சம்பளம் வாங்குவதற்கு என்ன காரணம்?
உலகின் உயரிய விருது எனக்கருதப்படும் இந்த விருதை வென்ற முதல் இந்தியர், முதல் தமிழர் ரஹ்மான் தான். இருப்பினும் ஆஸ்கார் நாயகன், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தானை பாட வைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இத்தனை பெரிய தொகை வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் முக்கிய கவனம் எப்போதுமே அவரது சொந்தப் பாடல்களாகவே இருந்து வருகிறது, எனவே அவர் இசையமைப்பாளராக பணிபுரியும் படங்களில் மட்டுமே பாட விரும்புகிறார். வேறொருவரின் இசையமைப்பில், அவர் குரல் கொடுக்க விரும்பினால், திரைப்பட தயாரிப்பாளர்கள் அவருக்கு அதிகப்படியான தொகையை வழங்க வேண்டும்.