
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
நடிகர் அஜித் தற்போது லைகா தயாரிப்பில் 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதமே வெளியான நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முதல் வாரத்தில் தொடங்கியது.
இந்நிலையில் விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றிபெற்ற 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் நடிக்க ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் அஜித் நடித்த போது, ஆதிக் அவரிடம் கதை சொன்னதாகவும், அந்த கதையை படமாக்குவதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளது.
கதையை இறுதியாகும்பட்சத்தில் இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
ட்விட்டர் அஞ்சல்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் #AK63?
Checked with official sources about Actor #AjithKumar - Director #AdhikRavichandran project..
— Ramesh Bala (@rameshlaus) October 12, 2023
Yes.. Discussions are on..
But nothing is official or confirmed yet.. #AK #AK63