LOADING...
ராகவா லாரன்ஸ் -எல்வின் இணைந்து நடிக்கும் 'புல்லட்' படத்தில் டிஸ்கோ சாந்தி ரீஎன்ட்ரி
'புல்லட்' படத்தில் டிஸ்கோ சாந்தி ரீஎன்ட்ரி pc: IANS

ராகவா லாரன்ஸ் -எல்வின் இணைந்து நடிக்கும் 'புல்லட்' படத்தில் டிஸ்கோ சாந்தி ரீஎன்ட்ரி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 09, 2025
10:09 am

செய்தி முன்னோட்டம்

ராகவா லாரன்ஸ் மற்றும் அவருடைய சகோதரர் எல்வின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'புல்லட்'. இந்த படத்தில் வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையை சாம் சி.எஸ். அமைக்கிறார், ஒளிப்பதிவை அரவிந்த் சிங் மேற்கொள்கிறார். 'டைரி' படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இயக்கும் இந்த திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கதிரேசன் தயாரிக்கிறார். தற்போது, இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

டிஸ்கோ சாந்தி

28 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி ஆகும் டிஸ்கோ சாந்தி

இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக, 1980 மற்றும் 90-களில் பிரபல நடிகையாக இருந்த டிஸ்கோ சாந்தி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரை உலகில் நுழைவது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்ததும், 1997-ஆம் ஆண்டு பிறகு படங்களில் நடிக்காத அவர், 'புல்லட்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் குறித்து இயக்குநர் இன்னாசி பாண்டியன் கூறும் போது, "இது ஒரு முழு நீள அமானுஷ்ய ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம். இந்தக் கதையை எனது முதல் படமாக இயக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. தற்போது இதை எனது இரண்டாவது படமாக உருவாக்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.