அடுத்த செய்திக் கட்டுரை

"மிஸ் யூ பவதா..": தங்கை பவதாரிணியின் மறைவிற்கு வெங்கட்பிரபு உருக்கமான போஸ்ட்
எழுதியவர்
Venkatalakshmi V
Jan 30, 2024
01:23 pm
செய்தி முன்னோட்டம்
பிரபல பாடகியும், இளையராஜாவின் ஒரே மகளுமான பவதாரிணி சென்ற வாரம் காலமானார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த போது இறந்துபோனார்.
இவரின் திடீர் மறைவு திரையுலகினர் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
பவதாரிணியின் உடலை பெறுவதற்காக, இலங்கைக்கு பயணம் ஆனது, அவரது சகோதரர்களான யுவன் ஷங்கர்ராஜாவும், உடன் இயக்குனர் வெங்கட் பிரபுவும்.
பண்ணைபுரத்தில், அவரின் இறுதி சடங்கின்போது, வெங்கட் பிரபு மனமுடைந்து அழுதது பலரையும் கலங்க வைத்தது.
பொதுவாக சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் VP, பவதாரிணியின் மறைவிற்கு எந்த பதிவும் போடமுடியாத மனநிலையில் இருந்தார்.
இந்த நிலையில், தற்போது வெங்கட் பிரபு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பவதாரிணியுடன் எடுத்த கடைசி புகைப்படம் என ஓரிரு படங்களை பகிர்ந்துள்ளார்.