தி கோட் படத்திற்காக வேறு எந்த படத்தையும் பார்க்க வேண்டியதில்லை; லோகேஷ் கனகராஜை கலாய்த்த வெங்கட் பிரபு
தி கோட் படத்தை பார்ப்பதற்கு முன் எந்த படத்தையும் பார்த்துவிட்டு வரவேண்டியதில்லை என இயக்குனர் வெங்கட் பிரபு ஜாலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் எல்சியு என்ற பெயரில் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் ஒன்றை உருவாக்கிய பிறகு, முந்தைய படங்களின் தொடர்ச்சியாக அடுத்த படங்களை எடுக்கும் போக்கு அதிகரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது விக்ரம் படத்தின்போது, கைதி படத்தை மீண்டும் பார்த்துவிட்டு விக்ரம் உலகிற்கு வாருங்கள் என வெளிப்படையாகவே கூறியிருந்தார். இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு அதை கலாய்க்கும் வகையில், தனது தி கோட் படத்தை பார்க்க வருபவர்கள் வேறு எந்த படத்தையும் பார்த்துவிட்டு வரவேண்டியதில்லை எனவும், நேரடியான வந்து படத்தை பார்த்து ஜாலியாக இருங்கள் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.