NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல" - வின்னர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    "கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல" - வின்னர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு
    வின்னர் படத்தில் வடிவேலு 'கைப்புள்ள' கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார்

    "கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல" - வின்னர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு

    எழுதியவர் Srinath r
    Sep 26, 2023
    06:40 pm

    செய்தி முன்னோட்டம்

    சுந்தர் சி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த், வடிவேலு, கிரண், எம் என் நம்பியார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் வின்னர்.

    படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு பின்னும் இப்படத்தை குறித்த நம் நினைவுகள் இன்னும் பிரஷ்ஷாக இருக்கிறது.

    காமெடி, செண்டிமெண்ட், காதல், ஆக்சன் என ஒரு மசாலா படத்திற்கு தேவையான அனைத்தையும் இந்த படத்தில் சுந்தர்.சி சேர்த்திருந்தது படத்தின் வெற்றியை உறுதி செய்தது.

    இருப்பினும், இப்படத்தில் ஹீரோ பிரசாந்துக்கு இணையாக, கலக்கிய 'வைகைப்புயல்' வடிவேலுவின் காமெடியை நம் யாராலும் மறக்க முடியாது.

    2nd card

    சுந்தர் சியின் கம் பேக் திரைப்படம்

    கல்லூரியில் வம்பு இழுத்துக் கொண்டிருக்கும் பிரசாந்தை, அவரது பாட்டி தாத்தா வாழும் கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார் பிரசாந்தின் அப்பாவான விஜயகுமார்.

    விஜயகுமார் காதல் திருமணம் செய்ததால், ஒதுக்கி வைத்து விட்ட அவரது தந்தையான எம் என் நம்பியாருக்கும், எம் என் ராஜமுக்கும் ஆதரவாக இருக்கிறார் வடிவேலு.

    பிரசாந்த், தனது தாத்தா பாட்டியை பார்க்க ஊருக்கு வரும்போது, கதாநாயகியான கிரணை பார்க்கிறார். பின்பு அது காதலாக மலர்கிறது.

    ரியாஸ்கானின் வில்லத்தனத்தை மீறி, பிரசாந்த் எப்படி தன் காதலியை கரம் பிடித்தார் என்பதை சுந்தர்.சி அவரது பாணியில் படத்தில் சொல்லி இருப்பார்.

    3rd card

    வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி

    இத்திரைப்படத்தில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்' தலைவர் 'கைபுள்ளயாக' வரும் வடிவேலுவின் கதாபாத்திரம், படத்தை வெற்றி படத்திலிருந்து மாபெரும் வெற்றி படமாக்கியது.

    படத்தில் வடிவேலு பேசிய ஒவ்வொரு வசனமும், 20 வருடங்களுக்கு பின் இன்றும் மீம் டெம்ப்ளேடாக நம்மை சிரிக்க வைக்கிறது.

    'கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல', 'இன்னொரு அடி விழுந்துச்சு...நான் அழுதுருவேன்', 'வாழ்க்கைனா சில அடிகள் விழத்தான் செய்யும்', ' இது வாலிப வயசு',' என்ன தம்பி என்ன ஆச்சு' என வடிவேலு பேசும் ஒவ்வொரு வசனமும், இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கும்.

    4rd card

    வின்னரின் வின்னிங் ஃபார்முலா

    சுந்தர் சி இயக்கிய 'அன்பே சிவம்', படம் வணிக ரீதியாக தோல்வியடைந்த பின், அவர் மீண்டும் தனது கமர்சியல் பாணிக்கு திரும்பினார்.

    ஒரு சினிமா வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய பொருட்செலவுகளோ, சூப்பர் ஸ்டர்களோ தேவையில்லை என தமிழ் சினிமாவிற்கு உணர்த்திய படம் வின்னர்.

    அனைவரும் பார்த்து பழகிய கதையை, மீண்டும் தன் பாணியில் நிறைய காமெடி மற்றும் ஆக்சன் சேர்த்து வெற்றி பெற வைத்து காட்டி கம் பேக் கொடுத்தார் சுந்தர் சி.

    வாய்ப்பு கிடைத்தால் வின்னர் நாம் அனைவரும் மீண்டும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர்
    தமிழ் திரைப்படம்
    தமிழ் திரைப்படங்கள்
    கல்லூரி

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    நடிகர்

    ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்!  ஹாரிஸ் ஜெயராஜ்
    தெலுங்கு நடிகரை கரம் பிடிக்கிறார் 'பிரம்மன்' பட நாயகி லாவண்யா திரிபாதி இந்திய சினிமா
    உடல் எடை குறைந்ததன் ரகசியம் உடைத்த ரோபோ ஷங்கர்  விஜய் டிவி
    'கில்லி' பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பிறந்தநாள்: அவரை பற்றி ஒரு சிறு தொகுப்பு பிறந்தநாள்

    தமிழ் திரைப்படம்

    "AK Moto Ride" என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ள நடிகர் அஜித்குமார்!  அஜீத்
    விரைவில் OTTயில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்!  தமிழ் திரைப்படங்கள்
    இரண்டாவது முறையாக விஜய்க்கு வில்லனாகும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா?  நடிகர் விஜய்
    D50: 100 கோடி ரூபாய் செலவில் உருவாகும் படத்தை இயக்கும் தனுஷ் தனுஷ்

    தமிழ் திரைப்படங்கள்

    இந்திய சினிமாவில் இது வரை வெளியான 'சூப்பர்-ஹீரோ' வெற்றி படங்கள் திரைப்பட வெளியீடு
     ஃபர்ஹானா படத்தின் சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்  தமிழ்நாடு
    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல் ஓடிடி
    "செய்தி" என்ற பெயரில் அப்பட்டமான பொய்களை பரப்புவதற்கு எல்லை உண்டு: நடிகர் பிரித்விராஜ் காட்டம் தமிழ் நடிகர்

    கல்லூரி

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் இந்தியா
    கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC யுஜிசி
    கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு  கோவை
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீலகிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025