மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி
வெள்ள பாதிப்பில் நிவாரண பணிகளை மேற்கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜை, விமர்சித்தவர்களுக்கு பதிலடி வழங்கியுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த கன மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்ததால் மாவட்டங்களின் பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகளை மாநில அரசு செய்து வந்த நிலையில், தன்னார்வலர்களும் மீட்பு பணியில் இணைந்து கொண்டனர். இந்நிலையில், திரைப்பட இயக்குனரான மாரி செல்வராஜும் மீட்பு பணிகளில் பங்கேற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டார். இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன், மாரி செல்வராஜும் சென்றார்
விமர்சனங்களுக்கு மாரி செல்வராஜ் பதில்
உதயநிதி ஸ்டாலின் உடன், வெள்ள பாதிப்புகளை, மாரி செல்வராஜ் ஆய்வு செய்யச் சென்றதை பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்திருந்தனர். திமுகவில் பதவியைப் பிடிப்பதற்காக, மாரி செல்வராஜ் இவ்வாறு செய்வதாகவும் சிலர் தெரிவித்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், ட்விட் செய்திருந்த மாரி செல்வராஜ் "என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல... நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது" என பதிவிட்டிருந்தார். மேலும் விசிக எம்எல்ஏ ஆளூர் ஷானவாஸ் உள்ளிட்டோர் மாறி செல்வராஜிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் குறித்த அவரது ட்விட்டர் பதிவில், சென்னை வெள்ளத்தில் வீட்டுக்குள்ளிருந்து வீடியோ பதிவிட்ட விஷால் போராளி ஆக்கப்பட்டார், உதவிய மாரி செல்வராஜ் கோமாளிக்கப்படுகிறார் என பதிவிட்டிருந்தார்.