கூலி படத்தில் 'தேவா' கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த்; லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்த பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த ஒரு வாரமாக படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் கதாப்பாத்திரங்களின் பெயர்களை போஸ்டர்களாக வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே, சத்யராஜ் ராஜசேகர் கதாப்பாத்திரத்திலும், நாகார்ஜுனா சைமன் கதாப்பாத்திரத்திலும், சௌபின் ஷாஹிர் தயாள் கதாப்பாத்திரத்திலும், ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி கதாப்பாத்திரத்திலும், உபேந்திரா காலீஷா கதாப்பாத்திரத்திலும் நடிப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், இறுதியான திங்கட்கிழமை (செப்டம்பர் 1) ரஜினிகாந்த் தேவா கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.