"என் அப்பாவே என்ன நம்பல"- மனம் திறந்த இயக்குனர் மனோஜ் பாரதிராஜா
செய்தி முன்னோட்டம்
தான் இயக்குனர் ஆவதற்கு பலர் காரணமாக இருந்தாலும், முக்கியமான காரணம் தான் மனைவி என்றும், அவர் தன்னை சுமந்து வந்த ஜீவன் எனவும் மனோஜ் பாரதிராஜா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா, தற்போது மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அத்திரைப்படம் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் அவர் இருந்த காலகட்டங்களை குறித்து பேசி இருந்தார்.
அவர் 2005 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை வேலை இல்லாமல் இருந்தார் எனவும் அந்த காலகட்டம் அவருக்கு கொரோனா காலகட்டம் போன்று இருந்ததாகவும் கூறியுள்ளார்.
2nd card
பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவான அப்பா பெயர்
இயக்குனராக வாய்ப்பு கேட்டு பல்வேறு நிறுவனங்களுக்கு செல்லும்போதெல்லாம் "உங்களிடம் தான் மனோஜ் கிரியேஷன் உள்ளதே?உங்கள் மீது உங்க அப்பாவிற்கு நம்பிக்கை இல்லையா?" என்றெல்லாம் கேட்கும் பலரிடமும், அவர் தனித்துவர முயற்சித்து வருவதாக கூறுவாராம்.
மனோஜ் பாரதிராஜாவிற்கு, தன் தந்தை தான் பாசிட்டிவான விஷயமாகவும், நெகட்டிவ்வான விஷயமாகவும் இருந்துள்ளார் என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் .
இந்த மாதிரியான காலகட்டங்களில் அவரது மனைவி மற்றும் அவரது குழந்தைகள் இல்லை என்றால், அவர் எப்போதோ மன அழுத்தத்திற்கு சென்று இருப்பார் என கூறியுள்ளார்.
மனோஜ்குமாரின் மனைவி நந்தனாவும் ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது .
3rd card
தேம்பி அழுத இயக்குனர் இமயம்
மார்கழி திங்கள் படப்பிடிப்பில் இருந்த மனோஜை, சந்தித்த இயக்குனர் பாரதிராஜா தேம்பி அழுதாரம்.
"நான் உன்னை என்னமோ நினைத்தேன். நானே உன்னை நம்பல. நான் தான் உன்னை கொண்டு வந்திருக்க வேண்டும்" என கண்ணீர் மல்க மனோஜிடம் பேசியுள்ளார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
மேலும் அவர், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவருடைய கஷ்டம் தெரியாது எனவும், அவரிடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும் எனவும் அந்த பேட்டியில் அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.