
அமீரின் 'மாயவலை' திரைப்படத்தின் டீசரை வெளியிடும் பிரபலங்கள்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் அமீர் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்துள்ள மாயவலை திரைப்படத்தின் டீசர், டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதை வெற்றிமாறன் உட்பட பல பிரபலங்கள் வெளியிடுகின்றனர்.
தமிழ் திரையுலகில் பருத்திவீரன், மௌனம் பேசியதே உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய அமீர், 2009ல் கதாநாயகனாக யோகி என்ற படத்தில் நடித்திருந்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை திரைப்படத்தின் மூலம், நடிகராக ரசிகர்கள் மத்தியில், இயக்குனர் அமீர் நற்பெயர் பெற்றார்.
இந்நிலையில் இவர் தற்போது, ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் மாயவலை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
2nd card
வெற்றிமாறன், கரு பழனியப்பன், சமுத்திரக்கனி, சசிகுமார் வெளியிடும் மாயவலை டீசர்
இந்நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, சமுத்திரக்கனி, சசிகுமார், பொன்வண்ணன், வெற்றிமாறன், பாடல் ஆசிரியர் சினேகன், சேரன் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.
அண்மையில், பருத்திவீரன் திரைப்படம் தொடர்பான சர்ச்சையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் அமீரை திருடன் எனவும், வேலை தெரியாதவர் எனவும் விமர்சித்திருந்தார்.
இதற்கு, சக இயக்குனர்களான சமுத்திரக்கனி, சசிகுமார், பொன்வண்ணன், கரு.பழனியப்பன், ஆகியோர் ஞானவேல் ராஜாவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்த நிலையில், அமீர் திரைப்படத்தின் டீசரை அவர்கள் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
மாயவலை திரைப்படத்தை முதலில் அமீரும், யுவன் சங்கர் ராஜாவும் தயாரிப்பதாக இருந்த நிலையில், தற்போது வெற்றிமாறனும், அமீரும் தயாரிக்கின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
பிரபல இயக்குனர்கள் இணைந்து வெளியிடும் மாயவலை திரைப்படத்தின் டீசர்
2️⃣ Days To Reveal! #Maayavalai Teaser to be released by #Vetrimaaran @directorcheran @karupalaniappan @SasikumarDir@thondankani @KavingarSnekan @ponvannansapien on December 5th (Tuesday) at 6 PM@GrassRootFilmCo @directorameer @afcmovies @jsmpicture @arjaffersadiq pic.twitter.com/uJMwYvESv2
— Maayavalai (@Mayavalai) December 3, 2023