LOADING...
இன்ஸ்டா ரீலில் காதலை உறுதி செய்தாரா சமந்தா?
நடிகை சமந்தா ரூத் பிரபு, திரைப்பட இயக்குநர் ராஜ் நிதிமோருவுடன்!

இன்ஸ்டா ரீலில் காதலை உறுதி செய்தாரா சமந்தா?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2025
06:42 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் ரீல் மூலம், திரைப்பட இயக்குநர் ராஜ் நிதிமோருவுடன் உள்ள உறவை சூசகமாக உறுதி செய்துவிட்டாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே பரபரப்பாகியுள்ளது. "Dubai for a minute" என தலைப்பிடப்பட்ட ரீல், துபாய் பயணத்தின் அழகிய தருணங்களை காட்டுவதுடன், ஒரு ஆணின் கையை சமந்தா பிடித்து நடக்கும் புகைப்படமும் இருந்ததுதான் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அந்த ஆண் இயக்குனர் ராஜ் நிதிமோரு எனக் கூறி, ரசிகர்கள் பலர் ஊகிக்கின்றனர். சமந்தா பகிர்ந்த இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகை திஷா பதானியும் "மிக அழகானது" என கமெண்ட் செய்திருக்க, இது மேலும் ஊகத்திற்கு வழிவகுத்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

தொழில்முறை

தொழில்முறை தொடர்பாக தொடங்கிய உறவு

சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு முதன்முதலாக 'தி ஃபேமிலி மேன் 2' தொடரில் இணைந்தனர். அதன் பின்னர், Citadel: Honey Bunny என்ற அமேசான் தொடருக்காக பணியாற்றினார். தொடர்ந்து, விரைவில் வெளியாகவுள்ள Rakta Charitra: The Bloody Kingdom என்ற நெட்ஃப்ளிக்ஸ் தொடருக்காக பணியாற்றியள்ளனர். இணைய வதந்திகள் பரவிகின்ற போதிலும், இது குறித்து சமந்தாவோ அல்லது ராஜ் நிதிமோருவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை. இருப்பினும், சமந்தாவின் சமீபத்திய ரீல், ரசிகர்களிடையே "இது ஒரு உறவின் soft launch" என்ற உணர்வை உருவாக்கியுள்ளது.