Page Loader
தனுஷின் 'ராயன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு
'ராயன்' வரும் ஜூலை 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது

தனுஷின் 'ராயன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 25, 2024
02:48 pm

செய்தி முன்னோட்டம்

தனுஷ் தானே நடித்து, இயக்கிய அவரது 50வது படமான 'ராயன்' அடுத்த மாதம் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம், அதன் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, 'ராயன்' வரும் ஜூலை 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ராயன் திரைப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'ராயன்' படத்தை தொடர்ந்து, தனுஷ் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தையும் இயக்கி வருகிறார். அதில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக நடிக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

ராயன் வெளியீட்டு தேதி