
ராயனுக்கு கிடைத்த ஆஸ்கார் அங்கீகாரம்; படக்குழுவினர் பகிர்ந்த மகிழ்ச்சி தகவல்
செய்தி முன்னோட்டம்
நடிகர் தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்து கடந்த வாரம் வெளியான 'ராயன்' திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கும் தி அகாடெமி அமைப்பு சர்வதேச அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த செய்தி தனுஷின் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை படக்குழுவினர் தங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
அதன்படி 'ராயன்' படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமி நூலகத்தில் இடம்பெற தேர்வாகி உள்ளதாக அறிவித்துள்ளது.
ராயன் திரைப்படம் வெளியான நாளில் இருந்து திரையரங்குகளில் ஹவுஸ்-ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படம் ரிலீஸான ஆறே நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்து வருகிறது.
இப்படத்தில் தனுஷ், SJ சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ராயனுக்கு கிடைத்த ஆஸ்கார் அங்கீகாரம்
#Raayan screenplay has been selected to be a part of the library of the Academy of Motion Picture Arts and Sciences.#RaayanMegaBlockbuster in cinemas near you!@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara… pic.twitter.com/wcZnAOdo0y
— Sun Pictures (@sunpictures) August 2, 2024