அடுத்ததுதடுத்து டைரக்ஷன் நோக்கி பயணிக்கும் தனுஷ்; 4வது படத்தை இயக்க ஆயத்தம்!
தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ராயன்'. அவரின் முதல் திரைப்படமான பவர் பாண்டிக்கு பின்னர் வெளியான திரைப்படம் என்பதால் படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. அதனை தொடர்ந்து அவர் இப்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆனது. இந்த சூழலில் அவர் அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டதாக இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே SJ சூர்யா, பிரகாஷ் ராஜ் போன்றோர் ராயன் ப்ரீ-ரிலீஸின் போது இது பற்றி தெரிவித்த நிலையில், தனுஷ் இயக்க போகும் நான்காவது படத்தின் நாயகி நித்யா மேனன் என்பது உறுதியாகி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.