Loading...
தனுஷ் படத்தின் தலைப்பு திடீர் மாற்றம்: 'O.M: Operation Mole' டிரெய்லர் வெளியீடு
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் திரைப்படத்தின் தலைப்பு 'Operation Mole' என மாற்றம்.

தனுஷ் படத்தின் தலைப்பு திடீர் மாற்றம்: 'O.M: Operation Mole' டிரெய்லர் வெளியீடு

எழுதியவர் Vasuki
Nov 14, 2026
11:45 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தனுஷ் நடிப்பில், அமரன் புகழ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆரம்பத்தில் 'OM - Chapter 1: Udhiram - The Blood Wood' என்று பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் தலைப்பு, ரிலீஸுக்குச் சரியாக ஒரு வாரத்திற்கு முன்பாகத் திடீரென 'O.M: Operation Mole' என மாற்றப்பட்டுள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியானதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்தத் திடீர் மாற்றம் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கதைக்களம்

தலைப்பு மாற்றத்திற்கான பின்னணி

தணிக்கை வாரியம் தொடர்பான சில நடைமுறைக் காரணங்களால் படத்தின் தலைப்பில் இந்த இறுதிக்கட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முந்தைய தலைப்பு செம்மரக் காடுகளின் பின்னணியைப் பிரதிபலித்த நிலையில், தற்போதைய 'O.M: Operation Mole' என்ற பெயர் கதையின் மையப்புள்ளியான ரகசிய உளவு நடவடிக்கையை (Undercover Operation) அழுத்தமாக உணர்த்துகிறது.

தனுஷின் 55-வது திரைப்படமான இதனை வொண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளன.

டிரெய்லர் வெளியீடு

நட்சத்திரப் பட்டாளத்துடன் களமிறங்கும் 'O.M: Operation Mole'

இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் பாலிவுட் மூத்த நடிகர் நசீருதீன் ஷா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவனாக மம்மூட்டி மிரட்டலான தோற்றத்தில் களமிறங்க, அந்தக் கடத்தல் வலையமைப்பிற்குள் ஊடுருவிச் செயல்படும் ரகசிய உளவாளியாக தனுஷும், 'ஆபரேஷன் மோல்' திட்டத்தை வழிநடத்தும் சிபிஐ அதிகாரியாக சாய் பல்லவியும் நடித்துள்ளதாக டிரெய்லர் காட்சிகள் உணர்த்துகின்றன.

சாய் அபயங்கரின் அனல் பறக்கும் பின்னணி இசை டிரெய்லருக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ள நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவை தனுஷ் ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT