Page Loader
தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் பற்றி வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாகவிருக்கிறது

தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் பற்றி வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!

எழுதியவர் Venkatalakshmi V
Mar 20, 2024
08:22 am

செய்தி முன்னோட்டம்

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாகவிருக்கிறது என்ற பேச்சு கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் உலவி வந்தது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தனுஷ் நேற்று மாலை வெளியிட்டார். தனுஷ் கடைசியாக அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, தன்னுடைய இயக்கத்தில் 'ராயன்' திரைப்படத்தையும் இயக்கி முடித்துவிட்டார். இதற்கிடையே 'NEEK' திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். அதுமட்டுமின்றி, தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பம்பரம் போல சுற்றிச்சுற்றி பிஸியாக நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக இளையராஜா பயோபிக்கில் நடிக்கவுள்ளதை நேற்று அறிவித்துள்ளார். இப்படம் குறித்த தகவலை இன்று மதியம் 12:30 மணிக்கு வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

embed

இளையராஜாவின் பயோபிக்

An epic journey begins pic.twitter.com/A7bQAO1Vy7— Dhanush (@dhanushkraja) March 19, 2024