LOADING...
ரன்வீர் சிங்- தீபிகா படுகோன் தம்பதி கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு
இந்த தம்பதிகள் தங்கள் முதல் குழந்தையை செப்டம்பர் 2024 இல் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்

ரன்வீர் சிங்- தீபிகா படுகோன் தம்பதி கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 29, 2024
11:18 am

செய்தி முன்னோட்டம்

பிரபல பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர். இன்று இன்ஸ்டாகிராமில் தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதன்படி, இந்த தம்பதிகள் தங்கள் முதல் குழந்தையை செப்டம்பர் 2024 இல் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நட்சத்திர ஜோடி 2018இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்ளின் இன்ஸ்டாகிராம் பதிவில், "செப்டம்பர் 2024" என்று குறிப்பிட்டு, சுற்றிலும் குழந்தைகளுக்கான உடைகள், குழந்தை காலணிகள் மற்றும் பலூன்கள் போன்ற அழகான உருவங்கள் பொறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். தீபிகா கடைசியாக ஹ்ரித்திக் ரோஷன் உடன் ஃபயிட்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு