"இப்போதிருக்கும் இளம் தலைமுறை தம்பதிகளுக்கு பொறுமை இல்லை": தீபிகா படுகோன்
பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் கோச்சடையான் என்ற ரஜினி படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முன்னாள் பேட்மிட்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகளாவார். கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட தீபிகா, பள்ளியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்தார். முன்னணி மாடலாக முன்னேறிய தீபிகா, ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஓம் ஷாந்தி ஓம்' என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதன் பின்னர் பல வெற்றி படங்களில் நடித்தவர், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு டிப்ஸ் தரும் தீபிகா
தற்போது தீபிகாவும், அவரது கணவர் ரன்வீர் சிங்கும், ஆங்கில பத்திரையான 'TIME'-இல் இடம் பெற்றனர். இதற்காக அவர் அளித்த பேட்டியில், "வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு தேவை தம்பதிகளிடையே இருக்க வேண்டிய பொறுமை" என கூறியுள்ளார். மேலும், "அந்த பொறுமை தற்போது இருக்கும் இளம் தலைமுறையினரிடம் இல்லை" எனவும் அவர் கூறுகிறார். "நமது முன்னோர்களிடம் இருந்து நாம் இந்த பொறுமையை கற்று கொள்ள வேண்டும் எனவும், நானும், எனது கணவரும், எங்கள் பெற்றோர்களிடம் இருந்து பல நல்ல விஷயங்களை கற்று கொண்டதால் தான் திருமண வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.