Loading...
மீண்டும் பெண் குழந்தை பிறந்தது! தீபிகா - ரன்வீர் தம்பதி வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி
தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை

மீண்டும் பெண் குழந்தை பிறந்தது! தீபிகா - ரன்வீர் தம்பதி வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 19, 2026
07:22 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியரான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இன்று (செப்டம்பர் 19) தங்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர். இதன் மூலம் அவர்களின் குடும்பம் தற்போது நான்கு உறுப்பினர்களாக மாறியுள்ளது.

அறிவிப்பு

சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான அறிவிப்பும் பாலிவுட் வாழ்த்துகளும்

தங்களுக்கு பெண் குழந்தை பிறந்த செய்தியை மிகவும் எளிமையான முறையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

"பெண் குழந்தையை வரவேற்கிறோம்" என்ற வரிகளுடன் கண் திருஷ்டி எமோஜியை அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இந்தத் தம்பதிக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

கர்ப்பம்

இரண்டாவது கர்ப்பம் குறித்து ஏப்ரல் மாதத்தில் வெளியான அறிவிப்பு

முன்னதாக இந்த ஆண்டின் ஏப்ரல் 19 ஆம் தேதி தங்களது இரண்டாவது கர்ப்பத்தை இவர்கள் முறைப்படி அறிவித்திருந்தனர்.

தங்களது முதல் மகளான துவா பாசிட்டிவ் பிரகனன்சி டெஸ்ட் கார்டைப் பிடித்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து அவர்கள் அந்த செய்தியை வெளியிட்டனர்.

அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இரண்டாவது குழந்தையும் நலமாகப் பிறந்துள்ளதால் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ADVERTISEMENT

ஒரே மாதம்

முதல் மகள் துவா பிறந்த நாள் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சி

தீபிகா - ரன்வீர் தம்பதிக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் பெண் குழந்தையான துவா பிறந்தார்.

முதல் குழந்தை பிறந்த அதே செப்டம்பர் மாதத்திலேயே தற்போது இரண்டாவது பெண் குழந்தையும் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்களது இரண்டு பெண் குழந்தைகளுடன் இந்த நட்சத்திர தம்பதி தங்களது வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT