Page Loader
தனுஷின் 'D54' படப்பிடிப்பு துவங்கியது; யார் இயக்குனர்?
தனுஷின் 'D54' படப்பிடிப்பு துவங்கியது

தனுஷின் 'D54' படப்பிடிப்பு துவங்கியது; யார் இயக்குனர்?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 10, 2025
11:10 am

செய்தி முன்னோட்டம்

தனுஷ் அவருடைய 54வது படத்தை துவங்கிவிட்டார். 'குபேரா' படத்தின் வெற்றியை கொண்டாடிவரும் நேரத்தில் அவருடைய இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராக உள்ள 'இட்லி கடை'யின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் தனுஷ். வேல்ஸ் ஃபிலிம் இன்டெர்னஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்குகிறார். 'போர் தொழில்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கும் இந்த படம், தனுஷின் திரைப்பயணத்தில் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கிரைம், திரில்லர் மற்றும் எமோஷன்கள் அடங்கிய ஒரு படமாக இருக்கும் எனவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

D54 படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் விவரங்கள்

தனுஷ் உடன் முதன்முறையாக 'ப்ரேமலு' புகழ் மமிதா பைஜூ நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம், கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, நிதின் சத்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு 'தேனி' ஈஸ்வர் கேமராமேனாக இணைந்துள்ளார். இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளது ஜி.வி.பிரகாஷ். முன்னதாக இப்படத்திற்காக போடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு செட்டை பிரிக்காமல், விஜயின் 'ஜனநாயகன்' படத்திற்காக தனுஷ் கொடுத்ததாகவும் செய்தி வெளியானது. இதன் உண்மைதன்மை தெரியவில்லை என்றாலும், இந்த செய்தி இரு நடிகர்களின் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.